/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தாலுகா ஆபீஸ் ஊழியர்கள் அலைக்கழிப்பதாக புகார்
/
தாலுகா ஆபீஸ் ஊழியர்கள் அலைக்கழிப்பதாக புகார்
ADDED : அக் 17, 2024 10:19 PM
திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றத்தில் தாலுகா அலுவலகம் இயங்குகிறது. இங்கு, வருவாய், நில அளவை துறை ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தாலுகா பகுதியினர், நிலம், வீட்டுமனைப் பட்டா பெறுவது, பட்டா பெயர் மாற்றம், பல வகை சான்றுகள் ஆகிய தேவைகளுக்காக, இணையவழியில் விண்ணப்பித்து வருகின்றனர்.
அது தொடர்பான விசாரணை, ஆவண சரிபார்ப்பு ஆகிய நடைமுறைகளுக்காக, விண்ணப்பதாரர்கள், தாலுகா அலுவலகம் செல்கின்றனர். அலுவலகத்தில் அலுவலர்களை சந்திக்க இயலாமல், அவர்கள் அலைக்கழிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது குறித்து, அப்பகுதிவாசிகள் கூறியதாவது:
விண்ணப்பதாரர்களை, தாலுகா அலுவலகம் வருமாறு, ஊழியர்கள் அழைக்கின்றனர். ஆனால், அவர்களோ தாமதமாக அலுவலகம் வருகின்றனர்.
பல மணி நேரம், அவரவர் இருக்கையில் இருப்பதும் இல்லை. இரண்டு ஊழியர்களிடம், ஏராளமான கோப்புகள் தேங்கியிருப்பதை, அதிகாரிகள் ஆய்வு செய்து அறியலாம்.
பல மணி நேரம் காத்திருந்தும், எங்கள் பணி முடிக்கப்படாமல், ஏமாற்றத்துடன் திரும்புகிறோம். உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.