/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நள்ளிரவில் பஸ் மோதி தாம்பரம் வாலிபர் பலி
/
நள்ளிரவில் பஸ் மோதி தாம்பரம் வாலிபர் பலி
ADDED : ஏப் 12, 2025 08:53 PM
தாம்பரம்:மேற்கு தாம்பரம், சிவராஜ் தெருவை சேர்ந்தவர் தீபக், 26; தனியார் நிறுவன ஊழியர்.
நேற்று முன்தினம் நள்ளிரவு 1:00 மணிக்கு, பணி முடிந்து, 'பல்சர்' இருசக்கர வாகனத்தில், சென்னை புறவழிச்சாலை வழியாக வீட்டிற்கு திரும்பினார்.
தாம்பரம் சாய் கார்டன் குடியிருப்பு அருகே வந்தபோது, வலதுபுற பக்கவாட்டில் சென்ற அடையாளம் தெரியாத வேன் மீது மோதி, தீபக் கீழே விழுந்தார்.
அப்போது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத பேருந்து ஏறி இறங்கியதில், படுகாயம் அடைந்த அவர், சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இது தொடர்பாக, குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து, வேன் மற்றும் பேருந்து குறித்து விசாரிக்கின்றனர்.

