/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தேசிய ஜூனியர் டென்னிஸ் தமிழக வீரர்கள் அசத்தல்
/
தேசிய ஜூனியர் டென்னிஸ் தமிழக வீரர்கள் அசத்தல்
ADDED : ஆக 12, 2025 11:01 PM
சென்னை: சென்னையில் நடந்து வரும் ஜூனியர் டென்னிஸ் போட்டியில், பிரதான சுற்றில், தமிழக வீரர்கள் வெற்றி பெற்று அசத்தினர்.
எம்.சி.சி., கிளப் சார்பில், தேசிய அளவிலான ஜூனியர் யு - 18 டென்னிஸ் போட்டி, சேப்பாக்கத்தில் நடந்து வருகிறது. போட்டி யில், நாடு முழுதும் இருந்து அணிகள் பங்கேற்றுள்ளன.
நேற்று நடந்த ஆண்களுக்கான மெயின் சுற்றில், தமிழக வீரர் மகாலிங்கம் கந்தவேல், 6 - 1, 6 - 1 என்ற கணக்கில் டில்லி வீரர் பிக்யான் பதியையும், மற்றொரு தமிழக வீரர் அர்னவ் ஹரிசங்கர், 6 - 0, 6 - 2 என்ற கணக்கில், பீஹார் வீரர் அபிஷேக் சிங்கையும் வீழ்த்தினர்.
தமிழக வீரர் நியந்த் மேலவிடயல் பத்ர், 6 - 1, 6 - 2 என்ற கணக்கில், மஹாராஷ்டிராவின் நீவ் ரவி கோத்தாரியை தோற்கடித்தார்.
மற்றொரு தமிழக வீரர் நித்திக் சிவகுமார், 6 - 2, 6 - 2 என்ற கணக்கில் உ.பி.,யின் சிங் கவுதமை வீழ்த்தினார். போட்டிகள் தொடர்கின்றன.