/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சிறப்பு முகாமில் வர்த்தகர்களிடம் வரி வசூல்
/
சிறப்பு முகாமில் வர்த்தகர்களிடம் வரி வசூல்
ADDED : பிப் 09, 2025 12:22 AM
திருக்கழுக்குன்றம், திருக்கழுக்குன்றம் வர்த்தகர்களிடம், சிறப்பு முகாமில் சொத்து வரி உள்ளிட்டவையாக, 1.66 லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டது.
திருக்கழுக்குன்றத்தில், பேரூராட்சி நிர்வாகம் சொத்து வரி, தொழில் வரி, பிற கட்டணங்கள் வசூலை தீவிரப்படுத்தி உள்ளது. இங்கு வர்த்தகர்கள் நிறைந்துள்ள நிலையில், அவர்கள் அலுவலகம் வராமல் அவற்றை செலுத்த கருதி, பேரூராட்சி நிர்வாகம் ஆண்டுதோறும், வணிகர் சங்க அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடத்தும்.
தற்போதும், பிப்., 6ம், 7ம் தேதிகளில் முகாம் நடத்தியது. வீட்டு வரியாக 36,000 ரூபாய், தொழில் வரியாக, 80,000 ரூபாய், தொழில் உரிம கட்டணமாக, 50,000 ரூபாய் செலுத்தப்பட்டு உள்ளதாக, பேரூராட்சித் தலைவர் யுவராஜ் தெரிவித்தார்.

