/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாநகராட்சியில் குடிநீர் இணைப்பு தரும் ஊழியரின் சொத்து மதிப்பு ரூ.4 கோடி 'பலே' வேலை பார்த்து மனைகள் வாங்கி குவிப்பு

ADDED : பிப் 07, 2025 12:18 AM

காஞ்சிபுரம்காஞ்சிபுரம், டெம்பிள்சிட்டி பகுதியில் வசிப்பவர் கண்ணன், 55; காஞ்சிபுரம் மாநகராட்சியில், குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்கும் 'பிட்டர்' ஊழியர்.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, அவர் மீதும், அவரது மனைவி கஜலட்சுமி, 49, மீதும் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து, நேற்று முன்தினம், அவரது வீட்டில் சோதனை நடத்தினர். கணக்கில் வராத 2.16 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.
போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில், காஞ்சிபுரம் நகர்ப்பகுதி மற்றும் சுற்றியுள்ள இடங்களில் ஏராளமான சொத்துக்களை வாங்கி குவித்திருப்பது தெரியவந்துள்ளது.
காஞ்சிபுரம் மாநகராட்சியில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி, நான்கு கோடி ரூபாய்க்கு மேலாக சொத்துக்களை வாங்கியுள்ளதாக, லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் தெரிவித்துள்ளனர்.