/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நடவு பணியிலும் இறங்கிய வடமாநில தொழிலாளர்கள்
/
நடவு பணியிலும் இறங்கிய வடமாநில தொழிலாளர்கள்
ADDED : நவ 27, 2024 11:55 PM

மதுராந்தகம்:மதுராந்தகம் சுற்றுவட்டார பகுதிகளில், விவசாயப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவமழை காரணமாக, மதுராந்தகம் வட்டாரத்திற்கு உட்பட்ட ஏரிகளில் நீர் நிரம்பியுள்ளன.
இதனால், பாசன மதகு வழியாக நீர் கொண்டு செல்லப்பட்டு, விவசாய பணிகள் நடந்து வருகின்றன.
தற்போது, நடவுப் பணிகள் மற்றும் நாற்று பறிக்கும் பணிகளுக்கு, உள்ளூர் வேலையாட்கள் கிடைக்காததால், ஆள் பற்றாக்குறை நிலவி வருகிறது.
இதனால், மேற்கு வங்கம், பீகார் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, விவசாய பணிகளுக்கு ஆட்கள் வரவழைக்கப்பட்டு, பணிகள் நடந்து வருகின்றன.
ஆண் நபர் ஒருவருக்கு, தினக்கூலியாக 900 ரூபாயும், பெண்களுக்கு 800 ரூபாயும் வழங்கப்படுகின்றது. அதன் அடிப்படையில், ஏக்கர் ஒன்றிற்கு 5,000 ரூபாய் வரை செலவு செய்யப்படுகிறது.
பத்து நபர் கொண்ட குழுவினர், நாள் ஒன்றுக்கு இரண்டு ஏக்கர் நடவு நட்டு முடிக்கின்றனர். உள்ளூரில் வேலை ஆட்கள் கிடைக்காததால், வெளி மாநிலத்திலிருந்து வரும் ஆட்களை வைத்து, விவசாய பணிகள் மேற்கொள்ள வேண்டிய நிலையில் இருப்பதாக, அப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர்.