/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கட்சி விளம்பர பலகையான ஊனமலை பயணியர் நிழற்குடை
/
கட்சி விளம்பர பலகையான ஊனமலை பயணியர் நிழற்குடை
ADDED : செப் 28, 2024 11:59 PM

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்டு, ஊனமலை ஊராட்சி உள்ளது. சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், சென்னை மார்க்கத்தில் ஊனமலை ஊராட்சிக்குட்பட்ட பயணியர் நிழற்குடை உள்ளது.
இந்த நிழற்குடையில், அரசியல் கட்சியினர் தங்களின் விளம்பரங்களை சுவர் ஓவியங்களாக வரைந்துள்ளனர். பிளக்ஸ் பேனர் உள்ளிட்டவற்றை, நிழற்குடை சுவர் முழுதும் ஒட்டி வைத்துள்ளனர்.
அரசு நிதியில் கட்டப்பட்ட பயணியர் நிழற்குடையில், பல்வேறு அரசியல் கட்சியினர் விளம்பர பலகைகளாக பயன்படுத்தி வருகின்றனர்.
எனவே, துறை சார்ந்த அதிகாரிகள், அவற்றை அப்புறப்படுத்தி, சம்பந்தப்பட்டோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வலியுறுத்தியுள்ளனர்.