/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பலத்த சத்தத்துடன் வெடித்து தீப்பற்றி எரிந்த மின்மாற்றி
/
பலத்த சத்தத்துடன் வெடித்து தீப்பற்றி எரிந்த மின்மாற்றி
பலத்த சத்தத்துடன் வெடித்து தீப்பற்றி எரிந்த மின்மாற்றி
பலத்த சத்தத்துடன் வெடித்து தீப்பற்றி எரிந்த மின்மாற்றி
ADDED : ஜூலை 24, 2025 01:39 AM

குரோம்பேட்டை:தாம்பரத்தை அடுத்த குரோம்பேட்டை, நியூ காலனி, ஒன்றாவது பிரதான சாலையில், ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு, சீரான மின்சாரம் வினியோகிக்க வசதியாக, மின்மாற்றி அமைக்கப் பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று காலை 8:30 மணிக்கு, அப்பகுதியில் உள்ள மின்மாற்றி, திடீரென பலத்த சத்தத்துடன் வெடித்து, தீப்பற்றி எரிந்தது.
இதை கண்ட அப்பகுதியில் வசிப்போர், அதிர்ச்சியடைந்து, மின் வாரியம் மற்றும் தாம்பரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்படி விரைந்து வந்த தாம்பரம் தீயணைப்பு துறையினர், மின் இணைப்பை துண்டித்து, தீயை அணைத்தனர். இதனால், அப்பகுதியில் சில மணி நேரம் மின் தடை ஏற்பட்டது.