/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பிரியாணி சமைத்து சாப்பிட்டு தொடரும் வ.துறையினர் போராட்டம்
/
பிரியாணி சமைத்து சாப்பிட்டு தொடரும் வ.துறையினர் போராட்டம்
பிரியாணி சமைத்து சாப்பிட்டு தொடரும் வ.துறையினர் போராட்டம்
பிரியாணி சமைத்து சாப்பிட்டு தொடரும் வ.துறையினர் போராட்டம்
ADDED : மார் 06, 2024 08:54 PM

செங்கல்பட்டு:தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்கம், செங்கல்பட்டு மாவட்டம் சார்பில், பல்வேறு போராட்டங்களை வலியுறுத்தி போராட்டம் நடந்து வருகிறது.
கலெக்டர் அலுவலக வளாகத்தில், மாவட்டத் தலைவர் வெங்கட்ராமன் தலைமையில், ஒன்பது நாட்களாக நடந்துவரும் காத்திருப்பு போராட்டத்தில், வருவாய்த் துறை ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்களில் பணிபுரியும் 96 சதவீத ஊழியர்கள், இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று நடந்த போராட்டத்தில், கலெக்டர் அலுவலக வளாகத்திலேயே பிரியாணி சமைத்து உண்டு, போராட்டத்தை தொடர்ந்தனர்.
தொடர் போராட்டத்தால், சான்றிதழ் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் முடங்கியுள்ளது.
தினமும் அலுவலகத்திற்கு வரும் மக்கள், ஏமாற்றத் துடன் திரும்பிச்செல்கின்றனர்.