/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கள்ளத்தொடர்பால் வந்த தகராறு பெண்ணை தாக்கி பணம் பறிப்பு
/
கள்ளத்தொடர்பால் வந்த தகராறு பெண்ணை தாக்கி பணம் பறிப்பு
கள்ளத்தொடர்பால் வந்த தகராறு பெண்ணை தாக்கி பணம் பறிப்பு
கள்ளத்தொடர்பால் வந்த தகராறு பெண்ணை தாக்கி பணம் பறிப்பு
ADDED : மார் 06, 2024 12:14 AM
மறைமலை நகர்:திருக்கழுக்குன்றம் அடுத்த சதுரங்கப்பட்டினம் பகுதியை சேர்ந்த பாலமுருகன், 40, என்ற நபருக்கும், மறைமலை நகர் அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த, 32 வயது திருமணமான பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.
இது, பாலமுருகனின் மனைவி அருணாவிற்கு தெரிந்து, அந்த இளம்பெண்ணிடம் கடந்த சில நாட்களாக சண்டையிட்டு வந்துள்ளார்.
அதனால், கடந்த 2ம் தேதி, அந்த பெண் அளித்த புகாரின்படி, பாலமுருகனை கைது செய்தனர்.
இந்நிலையில், அருணாவின் உறவினர்கள் இரண்டு பேர், நேற்று முன்தினம் இரவு மறைமலை நகரை சேர்ந்த பெண்ணை தாக்கி, அவரின் ஹோண்டா டியோ ஸ்கூட்டர், மற்றும் 30,000 ரூபாய் பணத்தை பறித்துச் சென்றனர்.
இது குறித்த புகாரின்படி, மறைமலை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.