/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஓராண்டாக பூட்டி கிடக்கும் மகளிர் சுகாதார வளாகம்
/
ஓராண்டாக பூட்டி கிடக்கும் மகளிர் சுகாதார வளாகம்
ADDED : செப் 23, 2024 06:10 AM
சித்தாமூர் : சித்தாமூர் அருகே புத்திரன்கோட்டை ஊராட்சியில், 1,000க்கும் மேற்பட்ட கிராமத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி வாசிகள் இயற்கை உபாதையை திறந்தவெளியில் கழிப்பதை தவிர்க்கும் வகையில், குடியிருப்பு பகுதி அருகே மகளிர் சுகாதார வளாகம் கட்டப்பட்டு, அப்பகுதியினர் பயன்படுத்தி வந்தனர்.
கடந்த சில ஆண்டுகளாக சரியான பராமரிப்பு இல்லாமல், சுகாதார வளாகம் புதர்மண்டி சீரழிந்தது. இதனால், சுகாதார வளாகத்தை பயன்படுத்த அப்பகுதி பெண்கள் ஆர்வம் காட்டவில்லை.
இதையடுத்து, கடந்தாண்டு 15வது நிதிக் குழு மானியத்தின் கீழ், மகளிர் சுகாதார வளாகம் சீரமைக்கப்பட்டது. ஆனால், சுகாதார வளாகம் தற்போது வரை செயல்படுத்தப்படாமல் பூட்டியே உள்ளதால், அப்பகுதி மக்கள் இயற்கை உபாதைகளை திறந்தவெளியில் கழிப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, சீரமைக்கப்பட்ட மகளிர் சுகாதார வளாகத்தை, மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.