/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
26,500 மரக்கன்றுகளுக்கு நீர் ஊற்றும் பணி ஆரம்பம்
/
26,500 மரக்கன்றுகளுக்கு நீர் ஊற்றும் பணி ஆரம்பம்
ADDED : மார் 04, 2024 06:54 AM

வேளச்சேரி : சென்னையின் பசுமையை மீட்டெடுக்க, பல தன்னார்வ அமைப்புகள், மரக்கன்றுகள் நட்டு பராமரித்து வருகின்றன.
அந்த வகையில், 'கிரீன் வேளச்சேரி' அமைப்பு, வேளச்சேரி - பெருங்குடி ரயில்வே சாலையை ஒட்டி, 150 அடி அகலம், 2 கி.மீ., நீள காலி இடத்தில் புங்கை, வேம்பு, பூவரசு, நாவல் உள்ளிட்ட 26,500 நாட்டு மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இதில், 20,000 மரக்கன்றுகள், 7 அடி வரை வளர்ந்துள்ளன. மேலும், 3,500 பனை விதைகள் நடப்பட்டுள்ளன.
கோடைக்கு முன்பே வெயில் கொளுத்தி வருவதால், மரக்கன்றுகளை காப்பாற்ற தண்ணீர் ஊற்றும் பணியில், தன்னார்வலர்கள் தீவிரம் காட்டி உள்ளனர். இதற்காக 3,000 லிட்டர் கொள்ளளவில், 12 இடங்களில் தண்ணீர் தொட்டிகளை, அவர்கள் ஏற்பாடு செய்து வைத்துள்ளனர்.

