/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வீட்டின் பூட்டை உடைத்து 5 சவரன் நகை திருட்டு
/
வீட்டின் பூட்டை உடைத்து 5 சவரன் நகை திருட்டு
ADDED : ஜன 30, 2024 03:53 AM
செய்யூர் : செய்யூர் அருகே ஓணம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் யுவராஜ், 42. விவசாயி. நேற்று காலை, வீட்டின் முன்பக்க கதவை பூட்டிவிட்டு, பின்புறத்தில் விவசாய வேலை செய்துள்ளார்.
காலை 11:30 மணிக்கு, வேலை முடிந்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது, முன்பக்க கதவை உடைத்து, பீரோவில் இருந்த, 5 சவரன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்று உள்ளது தெரிந்தது. அதிர்ச்சியடைந்த யுவராஜ், செய்யூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த செய்யூர் போலீசார், அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள 'சிசிடிவி' காட்சி பதிவுகள் மூலமாக, பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து கைவரிசை காட்டிய மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.