ADDED : அக் 15, 2024 07:16 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு ராட்டினம்கிணறு அண்ணா நகர் மேம்பாலம் அருகில், செங்கல்பட்டு நகர போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, அந்த பகுதியில் சந்தேகப்படும் வகையில் சுற்றித்திரிந்த வாலிபரை மடக்கி, சோதனை செய்தனர்.
அதில், அவர் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, அந்த நபரை காவல் நிலையம் அழைத்து சென்று நடத்திய விசாரணையில், பிடிபட்டவர் செங்கல்பட்டு அடுத்த வல்லம் பகுதியை சேர்ந்த நவீன் குமார், 23, என்பது தெரிய வந்தது.
கஞ்சா எவ்வாறு கிடைத்தது என, போலீசார் நடத்திய விசாரணையில், செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அருகில் விற்பனை செய்யப்படுவதாக, நவீன் குமார் தகவல் அளித்தார்.
அதன்படி, போலீசார் செங்கல்பட்டு நேதாஜி நகர் பகுதியை சேர்ந்த முருகன், 39, மேலமையூர் பகுதியை சேர்ந்த பூபாலன், 46, ஆகியோரையும் கைது செய்து, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.