/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நாட்டு வெடிகுண்டு வழக்கு மூன்று பேருக்கு 'குண்டாஸ்'
/
நாட்டு வெடிகுண்டு வழக்கு மூன்று பேருக்கு 'குண்டாஸ்'
நாட்டு வெடிகுண்டு வழக்கு மூன்று பேருக்கு 'குண்டாஸ்'
நாட்டு வெடிகுண்டு வழக்கு மூன்று பேருக்கு 'குண்டாஸ்'
ADDED : செப் 22, 2025 12:42 AM

கடம்பத்துார்:கடம்பத்துார் அருகே நாட்டு வெடிகுண்டு வீசி, வாலிபரை கொலை செய்ய முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள மூவர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. கடம்பத்துார் ஒன்றியம் சிற்றம்பாக்கத்தைச் சேர்ந்தவர் சேது, 26.
இவர், கடந்த மாதம் 20ம் தேதி, வீட்டருகே நின்றிருந்த போது, 'மாருதி ஸ்விப்ட்' காரில் வந்த நபர்கள், அவர் மீது நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயன்றனர். இதுகுறித்து, வழக்கு பதிந்த கடம்பத்துார் போலீசார், இருளஞ்சேரி முகேஷ், 21, நரசிங்கபுரம் அபிமன்யூ, 21, வினோத்குமார், 24, மூவரை கைது செய்து, திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.
மூவர் மீதும் பல்வேறு வழக்குகள் இருந்ததால், எஸ்.பி., விவேகானந்த சுக்லா பரிந்துரையின்படி, கலெக்டர் பிரதாப், மூவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.