/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சாய்ந்த நிலையில் மின் கம்பம் ஜி.எஸ்.டி., சாலையில் அச்சம்
/
சாய்ந்த நிலையில் மின் கம்பம் ஜி.எஸ்.டி., சாலையில் அச்சம்
சாய்ந்த நிலையில் மின் கம்பம் ஜி.எஸ்.டி., சாலையில் அச்சம்
சாய்ந்த நிலையில் மின் கம்பம் ஜி.எஸ்.டி., சாலையில் அச்சம்
ADDED : செப் 07, 2025 12:23 AM

மறைமலை நகர்:சிங்க பெருமாள் கோவில் அடுத்த மகேந்திரா சிட்டி ஜி.எஸ்.டி., சாலையின் மைய தடுப்பில், மின் கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.
திருச்சி -- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தினமும் லட்சக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையில் மகேந்திரா சிட்டி பகுதியில் உள்ள மைய தடுப்பில், மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. சாலை சந்திப்பு அருகில் உள்ள கம்பம், சாய்ந்த நிலையில் உள்ளது.
இது குறித்து, வாகன ஓட்டிகள் கூறியதாவது:
மகேந்திரா சிட்டி சந்திப்பு அருகே உள்ள மின் கம்பம் உடைந்து, சாய்ந்த நிலையில் உள்ளது. இதனால், அந்த பகுதியை கடக்கும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
பருவ மழைக்காலம் என்பதால் பலத்த காற்று வீசும் போது, கம்பம் முறிந்து வாகன ஓட்டிகள் மீது விழும் அபாயம் உள்ளது.
எனவே, சாய்ந்த நிலையில் உள்ள மின் கம்பத்தை மாற்றியமைக்க, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.