/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
எலப்பாக்கம் அரசு பள்ளியில் கழிப்பறை பணிகள் மந்தம்
/
எலப்பாக்கம் அரசு பள்ளியில் கழிப்பறை பணிகள் மந்தம்
ADDED : ஜூன் 12, 2025 02:32 AM

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட எலப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், கழிப்பறை கட்டுமான பணிகள் தாமதமாவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எலப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், கழிப்பறை கட்டப்பட்டு வருகிறது. பள்ளி கோடை விடுமுறையில் துவக்கப்பட்ட இந்த கட்டுமான பணிகள், தற்போது வரை முடிவு பெறாமல் நடக்கின்றன.
கட்டுமானத்திற்கு தேவையான ஜல்லி, எம்.சாண்ட் மற்றும் கட்டுமான பலகைகள் உள்ளிட்டவற்றை, இப்பகுதியில் வைத்து கட்டுமான பணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இதனால் பள்ளி மாணவ - மாணவியர் உடற்கல்வி பாடவேளையில், விளையாடுவதற்கு போதிய இடவசதியின்றி சிரமப்படுகின்றனர்.
மேலும், கட்டுமான பணிகள் நடைபெறும் பகுதியைச் சுற்றி, பச்சை நிற துணியால் மறைப்பு ஏற்படுத்தி மாணவ - மாணவியர், அப்பகுதிக்குச் செல்லாதவாறு தடுப்பு அமைக்க வேண்டும். அதையும் செய்யாமல் பணி நடக்கிறது.
எனவே, கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க, அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை வலுத்துள்ளது.