/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நெடுங்கல் கிராம சாலையில் போக்குவரத்து துண்டிப்பு
/
நெடுங்கல் கிராம சாலையில் போக்குவரத்து துண்டிப்பு
ADDED : டிச 03, 2024 05:38 AM

அச்சிறுபாக்கம் : ஒரத்தி- தொழுப்பேடு மாநில நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து, மின்னல் சித்தாமூர் வழியாக, நெடுங்கல் ஊராட்சிக்கு செல்லும் கிராம சாலை உள்ளது.
இந்த சாலையில், 10 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட சிறு பாலம், கடந்த 2022-ல் பெய்த கனமழையில் சேதமடைந்தது.
இதனால், மழைநீர் வெளியேற முடியாமல், சாலையில் மண் அரிப்பு ஏற்பட்டு, வாகனங்கள் செல்ல முடியாதபடி சாலை துண்டிக்கப்பட்டது.
இதையடுத்து, தற்காலிகமாக பாலம் அமைத்து, மேற்பகுதியில் மண் கொட்டி சமன் செய்யப்பட்டது.
தற்போது, கடந்த சில நாட்களாக பெய்த வடகிழக்கு பருவமழை காரணமாக, பாலத்தின் மீது வெள்ள நீர் சென்றதால், சாலையில் மண் அரிப்பு ஏற்பட்டு, போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
நான்கு சக்கர வாகனங்கள் செல்ல முடியாதபடி, சாலை கடுமையாக சேதமடைந்துள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இப்பகுதியில் ஆய்வு செய்து, இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வாக, பெரிய பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.