/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
குறுவட்ட வருவாய் ஆய்வாளர்களுக்கு குறுகிய பணி காலத்திற்குள் இடமாற்றம்
/
குறுவட்ட வருவாய் ஆய்வாளர்களுக்கு குறுகிய பணி காலத்திற்குள் இடமாற்றம்
குறுவட்ட வருவாய் ஆய்வாளர்களுக்கு குறுகிய பணி காலத்திற்குள் இடமாற்றம்
குறுவட்ட வருவாய் ஆய்வாளர்களுக்கு குறுகிய பணி காலத்திற்குள் இடமாற்றம்
ADDED : பிப் 08, 2025 08:14 PM
வருவாய் ஆய்வாளர்கள், குறுகிய பணி காலத்திற்குள் பணியிடம் மாற்றப்பட்டனர். இடமாற்ற உத்தரவு திரும்ப பெறப்படலாம் என காத்திருந்தும் உத்தரவில் மாற்றம் இல்லாததால், மாறுதல் இடத்தில் பொறுப்பேற்றனர்.
வருவாய்த் துறையில், 'பிர்கா' எனப்படும் குறுவட்டத்தில், வருவாய் ஆய்வாளர் பணியிடம் முக்கியமானதாக உள்ளது. பொதுமக்களுக்கு அத்துறை வழங்கும் ஜாதி, இருப்பிடம், வருமானம் ஆகிய சான்றுகளுக்கு ஆவண அறிக்கை அளிப்பது, நில பதிவேடுகள் பராமரிப்பு உள்ளிட்ட பணிகளை, வருவாய் ஆய்வாளர் மேற்கொள்கிறார்.
அத்துறை சார்ந்த அடிப்படை நிர்வாக பணிகளை அறியும் நடைமுறையாகவே, இப்பணியிடம் உள்ளதால், இரண்டு ஆண்டுகள் முழுமையாக அவர்கள் பணியாற்ற வேண்டும்.
வருவாய் ஆய்வாளர், அடுத்தடுத்து முதுநிலை வருவாய் ஆய்வாளர், மண்டல துணை தாசில்தார், தலைமையிடத்து துணை தாசில்தார், நீதித்துறை பயிற்சியைத் தொடர்ந்து, தாசில்தார் என பதவி உயர்வு பெறுவர்.
ஓரிடத்தில் இரண்டு ஆண்டுகள் பணியாற்ற வேண்டிய நிலையில், நிர்வாக காரணம் என்ற பெயரில், குறுகிய பணிக் காலத்தில் அவர்கள் வேறிடம் மாற்றப்படுகின்றனர்.
செங்கல்பட்டு சப் - கலெக்டர் நாராயணசர்மா, கடந்த மாதம் மாவட்ட வருவாய் அலுவலராகவும் கூடுதல் பொறுப்பு வகித்த போது, முதுநிலை வருவாய் ஆய்வாளர்கள், குறுவட்ட வருவாய் ஆய்வாளர்கள் என, ஒன்பது பேரை பணியிடம் மாற்றி, ஜன., 25ம் தேதி உத்தரவிட்டார்.
பையனுார் வருவாய் ஆய்வாளர், நெரும்பூருக்கும், நெரும்பூர் வருவாய் ஆய்வாளர் பையனுாருக்கும், மானாமதி வருவாய் ஆய்வாளர் கரும்பாக்கத்திற்கும், கரும்பாக்கம் வருவாய் ஆய்வாளர் மானாமதிக்கும் மாற்றப்பட்டனர்.
நான்கு பேரும், ஏழு மாதங்கள் - ஓராண்டு வரையே பணியாற்றியுள்ளனர். இரண்டு ஆண்டுகள் முடிவதற்குள், குறுகிய பணி காலத்திற்குள் மாற்றப்பட்ட நிலையில், பணியிட உத்தரவு திரும்ப பெறப்படலாம் என எதிர்பார்த்தனர்.
ஆனால், இரண்டு வாரங்கள் கடந்தும் திரும்ப பெறப்படாததால், அவர்கள் மாறுதல் பணியிடத்தில் தற்போது பொறுப்பேற்றனர்.
- நமது நிருபர் -