/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சிட்லப்பாக்கம் ஏரி ஆக்கிரமிப்பு அகற்ற தீர்ப்பாயம் உத்தரவு
/
சிட்லப்பாக்கம் ஏரி ஆக்கிரமிப்பு அகற்ற தீர்ப்பாயம் உத்தரவு
சிட்லப்பாக்கம் ஏரி ஆக்கிரமிப்பு அகற்ற தீர்ப்பாயம் உத்தரவு
சிட்லப்பாக்கம் ஏரி ஆக்கிரமிப்பு அகற்ற தீர்ப்பாயம் உத்தரவு
ADDED : செப் 13, 2025 01:11 AM
சென்னை:சென்னை, சிட்லபாக்கம் ஏரியின் மேற்குப் பகுதியில் 6 ஏக்கர் பரப்பை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஏரியின் முழு பரப்பையும் மீட்டெடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இது சம்பந்தமான செய்தி, நாளிதழ்களில் வெளியானது.
அதன் அடிப்படையில் தாமாக முன்வந்து, வழக்கு பதிந்து விசாரித்து வரும் தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவு:
சிட்லப்பாக்கம் ஏரியில் 45 ஆக்கிரமிப்பாளர்களை நீர்வளத்துறை வெளியேற்ற வேண்டும்.
ஆக்கிரமிப்புகளை அகற்ற, காவல் துறையின் பாதுகாப்பு கோரப்பட்டுள்ளதாக, நீர்வளத்துறை வழக்கறிஞர் தெரிவித்தார்.
இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நீர்வளத் துறை, செங்கல்பட்டு கலெக்டர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கின் அடுத்த விசாரணை வரும் 19ம் தேதி நடக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.