/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கார்களில் 'பேட்டரி' திருடிய இருவர் கைது
/
கார்களில் 'பேட்டரி' திருடிய இருவர் கைது
ADDED : ஏப் 26, 2025 07:24 PM
மறைமலைநகர்:மறைமலைநகர் போலீசார் நேற்று முன்தினம் இரவு, மறைமலைநகர் டேன்சி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக 'யமாஹா ஆர்.15' பைக்கில் வந்த இரண்டு நபர்களை மடக்கி சோதனை நடத்தினர்.
அப்போது, அவர்களிடம் கார்களின் 'பேட்டரி'கள் இருந்தன.
இருவரிடமும் இதுகுறித்து விசாரித்த போது, முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறவே, காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.
இதில் இருவரும், திருப்போரூர் அடுத்த மேலையூர் கிராமத்தைச் சேர்ந்த பிரவீன், 32, விஷ்ணு,19, என்பதும், கூடுவாஞ்சேரி பகுதியில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கார்களில் பேட்டரிகளை திருடி வந்ததும் தெரிந்தது.
இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

