/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மூன்று டூ - வீலர்கள் திருட்டு இருவர் கைது; ஒருவருக்கு வலை
/
மூன்று டூ - வீலர்கள் திருட்டு இருவர் கைது; ஒருவருக்கு வலை
மூன்று டூ - வீலர்கள் திருட்டு இருவர் கைது; ஒருவருக்கு வலை
மூன்று டூ - வீலர்கள் திருட்டு இருவர் கைது; ஒருவருக்கு வலை
ADDED : ஜன 03, 2024 09:39 PM

திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த சிறுசேரி சிப்காட் அருகே, அடுத்தடுத்த தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த ஐ.டி., ஊழியர்களின் 'ஆர்15' என்ற இரண்டு பைக்குகள், பல்சர் பைக் ஒன்று என, மூன்று பைக்குகள், கடந்த டிசம்பர் 22ம் தேதி திருடு போயின.
இது குறித்து, கேளம்பாக்கம் போலீசில் ஐ.டி., ஊழியர்கள் புகார் அளித்தனர். குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் தலைமையில் தனிப்படை அமைத்து, விசாரணை மேற்கொள்ளப்பட்டது.அதில், கண்ணகி நகரை சேர்ந்த துரைராஜ், 28, திருமழிசையைச் சேர்ந்த தினகரன், 22, என்பதும், மூன்று பைக்குகளையும் திருடியதும் தெரிந்தது. இந்த திருட்டில், ஐந்து பேர் கொண்ட கும்பல் ஈடுபட்டதும் தெரிந்தது.
மூன்று பைக்குகளையும் பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் கைது செய்தனர். மற்ற இருவர் கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில், வேறு ஒரு குற்ற வழக்கில் கைதாகி சிறையில் உள்ளனர். தலைமறைவாக உள்ள மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர்.