ADDED : டிச 15, 2024 10:49 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மறைமலை நகர்:செங்கல்பட்டு அடுத்த மகேந்திரா சிட்டி பகுதியில் நேற்று முன்தினம் இரவு செங்கல்பட்டு தாலுகா போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் போலீசாரை கண்டு தப்பிச் செல்ல முயன்ற போது போலீசார் அவர்களை பிடித்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் இருவரும் செங்கல்பட்டு அடுத்த இடர் குன்றம் பகுதியை சேர்ந்த செல்வம் மகன் ஜெகதீஷ், 28.அதே கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன் மகன் துரைமுருகன், 27.என்பத தெரிந்தது.
இருவரும் செங்கல்பட்டு சுற்று வட்டாரங்களில் கொள்ளை, திருட்டு சம்பவங்களிலும் ஈடுபட்டு வந்ததும் தெரிந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்து செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.