/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அடிதடி வழக்கில் இருவருக்கு 'காப்பு'
/
அடிதடி வழக்கில் இருவருக்கு 'காப்பு'
ADDED : அக் 16, 2025 09:42 PM
பவுஞ்சூர்: பவுஞ்சூர் அடுத்த தண்டரை, திருமால் நகரைச் சேர்ந்தவர் சாம்ராஜ், 20.
இவர், கடந்த பிப்ரவரியில், சிறுமி ஒருவரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதைப் பார்த்த சண்முகம் என்பவர், சிறுமியின் தந்தையிடம், கூறியுள்ளார்.
அதன் பின், சிறுமியின் தந்தை அளித்த புகாரின்படி, அணைக்கட்டு போலீசார் சமீபத்தில், சாம்ராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பின், ஜாமினில் வெளியே வந்த சாம்ராஜ், தன் நண்பர்களான குருமூர்த்தி, 21, சுனில், 19, சரண், 19, ஆகியோருடன் சேர்ந்து, தன்னை வழக்கில் சிக்க வைத்த சண்முகம் மற்றும் சண்முகத்தின் அக்கா மகனான சதீஷ் ஆகியோரை, நேற்று முன்தினம் தாக்கியுள்ளார்.
இதுகுறித்து, புகாரின்படி அணைக்கட்டு போலீசார், சாம்ராஜ், குருமூர்த்தி ஆகிய இருவரை கைது செய்தனர்.
மேலும் தப்பியோடிய சுனில், சரண் ஆகிய இருவரை தேடி வருகின்றனர்.