/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பைக்குகள் நேருக்குநேர் மோதி இருவர் உயிரிழப்பு
/
பைக்குகள் நேருக்குநேர் மோதி இருவர் உயிரிழப்பு
ADDED : டிச 29, 2025 07:06 AM
சதுரங்கப்பட்டினம்: கல்பாக்கம் அருகே, இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில், இருவர் உயிரிழந்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த கொந்தகாரிகுப்பத்தைச் சேர்ந்தவர் வெங்கட், 20. இவர், நேற்று முன்தினம் இரவு 7:00 மணியளவில், கொந்தகாரிகுப்பத்தில் இருந்து கல்பாக்கத்திற்கு, 'பேஷன் புரோ' பைக்கில் புறப்பட்டார்.
முகையூரைச் சேர்ந்த சண்முகம், 48, என்பவர், கல்பாக்கத்தில் இருந்து முகையூருக்கு, 'பேஷன் புரோ' பைக்கில் சென்றார்.
வாயலுார் பகுதியில் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் இருவரின் பைக்குகளும் மோதின. இதில், பலத்த காயமடைந்த இருவரையும், சதுரங்கப்பட்டினம் போலீசார் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு மருத்துவர்களின் பரிசோதனையில், இருவரும் இறந்தது தெரிய வந்தது. சம்பவம் குறித்து வழக்கு பதிந்து போலீசார் விசாரிக்கின்றனர்.

