/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கட்டுப்பாடின்றி திரியும் மாடுகள் புறநகர் நெடுஞ்சாலையில் அச்சம்
/
கட்டுப்பாடின்றி திரியும் மாடுகள் புறநகர் நெடுஞ்சாலையில் அச்சம்
கட்டுப்பாடின்றி திரியும் மாடுகள் புறநகர் நெடுஞ்சாலையில் அச்சம்
கட்டுப்பாடின்றி திரியும் மாடுகள் புறநகர் நெடுஞ்சாலையில் அச்சம்
ADDED : டிச 04, 2024 12:57 AM

மறைமலைநகர்:திருச்சி -- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், புறநகர் பகுதிகளான பொத்தேரி, காட்டாங்கொளத்துார், மறைமலைநகர், பேரமனுார், கீழக்கரணை, சிங்கப்பெருமாள்கோவில் உள்ளிட்ட பகுதிகளில், சாலையில் சுற்றித் திரியும் கால்நடைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதனால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி பாதிக்கப்பட்டு வருகின்றனர். சாலை மையத்தடுப்பில் படுத்துறங்கும் மாடுகள் திடீரென எழுந்து நெடுஞ்சாலையில் ஓடும் போது, வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.
நேற்று காலை, செங்கல்பட்டு பரனுார் ஜி.எஸ்.டி., சாலையில், இரண்டு காளை மாடுகள் ஒன்றுடன் ஒன்று முட்டி சண்டையிட்டுக் கொண்டு, சாலையின் நடுவே ஓடின.
நல்வாய்ப்பாக, அந்த நேரத்தில் வாகனங்கள் ஏதும் செல்லாததால், விபத்து ஏற்படவில்லை.
இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:
தேசிய நெடுஞ்சாலைகளில் நாளுக்கு நாள் மாடுகள், நாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுந்து, விபத்தில் சிக்கி வருகின்றனர். போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுகிறது.
எனவே, மாடுகளை சாலைகளில் திரிய விடுவோர் மீது, மாவட்ட நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.