/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கோவில் குளத்தில் மிதந்த அடையாளம் தெரியாத உடல்
/
கோவில் குளத்தில் மிதந்த அடையாளம் தெரியாத உடல்
ADDED : ஏப் 20, 2025 07:15 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்போரூர்:திருப்போரூர், ஓ.எம்.ஆர்., எனும் பழைய மாமல்லபுரம் சாலையை ஒட்டி, கந்தசுவாமி கோவிலின் சரவண பொய்கை குளம் அமைந்துள்ளது.
இக்குளத்தில் நேற்று முன்தினம் மாலை 6:00 மணியளவில், 35 முதல் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று மிதப்பதாக, அங்கிருந்தோர் திருப்போரூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் அந்த சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இதுகுறித்த தகவலின்படி, திருப்போரூர் வி.ஏ.ஓ., இந்து, திருப்போரூர் போலீசில் புகார் அளித்தார்.
இதன்படி, போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். இறந்தவர் பெயர், ஊர் உள்ளிட்ட விவரங்கள் தெரியவில்லை.

