/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கல்பாக்கத்தில் தடையின்றி மின் உற்பத்தி
/
கல்பாக்கத்தில் தடையின்றி மின் உற்பத்தி
ADDED : டிச 02, 2024 02:14 AM
கல்பாக்கம்:இந்திய அணுமின் கழகத்தின்கீழ், கல்பாக்கத்தில், சென்னை அணுமின் நிலையம் இயங்குகிறது. யூனிட் - 1, யூனிட் - 2 ஆகிய மின் உற்பத்தி அலகுகள், தலா 220 மெ.வா., மின்திறனில் உள்ளன.
கடந்த 2018ல், யூனிட் - 1 அலகில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு, ஆறு ஆண்டுகளாக முடங்கியுள்ளது. யூனிட் - 2 மட்டுமே இயங்குகிறது.
வங்கக் கடலில் உருவான பெஞ்சல் புயல், நேற்று கரையை கடக்கஇருந்த நிலையில், பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதன் காரணமாக, அணுமின் நிலைய மின் உற்பத்தியில் தடங்கல் ஏற்பட்டுள்ளதா என, இந்நிலைய வட்டாரத்தில் விசாரித்தோம்.
அவர்கள் கூறியதாவது:
புயல், மழை காரணமாக, மின் உற்பத்தியில் எப்போதுமே தடங்கல் ஏற்படாது. அவை பாதிக்காதவாறு, பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளன. யூனிட் - 2 முழு உற்பத்தி திறனில் இயங்குகிறது.
கடற்கரையில் புயலால் ஏற்படும் சேதங்களை தவிர்க்க கூடுதல் ஆட்கள் நியமித்து, நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு கூறினர்.