/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மேலப்பட்டு மகளிர் சுகாதார வளாகம் பயன்பாட்டிற்கு வர வலியுறுத்தல்
/
மேலப்பட்டு மகளிர் சுகாதார வளாகம் பயன்பாட்டிற்கு வர வலியுறுத்தல்
மேலப்பட்டு மகளிர் சுகாதார வளாகம் பயன்பாட்டிற்கு வர வலியுறுத்தல்
மேலப்பட்டு மகளிர் சுகாதார வளாகம் பயன்பாட்டிற்கு வர வலியுறுத்தல்
ADDED : டிச 26, 2024 12:45 AM

செய்யூர், செய்யூர் அடுத்த சிறுவங்குணம் ஊராட்சி, மேலப்பட்டு கிராமத்தில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இங்கு, ஊராட்சி நிர்வாகம், கடந்த, சில ஆண்டுகளுக்கு முன் மகளிர் ஒருங்கிணைந்த சுகாதார வளாகம் கட்டி பயன்பாட்டிற்கு விடப்பட்டது.
ஆரம்பத்தில் பெண்கள் சுகாதார வளாகத்தை பயன்படுத்திய நிலையில், ஊராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால் சுகாதார வளாகம் பழுதடைந்தது. இதையடுத்து மகளிர் பயன்படுத்தாமல் பல மாதங்களாக பூட்டியே கிடந்தது.
தொடர்ந்து, கடந்தாண்டு, 15 வது நிதிக்குழு மானியம், 2020- -- 21ம் ஆண்டு திட்டத்தின் கீழ், 1 லட்சத்து, 50,000 ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து மகளிர் சுகாதார வளாகம் சீரமைக்கப்பட்டது.
ஆனால், மூன்று மாதங்களுக்கு மேல் ஆகியும், சுகாதார வளாகம் செயல்படாமல் பூட்டியே உள்ளது.
இதனால் இப்பகுதி பெண்கள் இயற்கை உபாதைகளை திறந்த வெளியில் கழிக்க கடும் சிரமப்படுகின்றனர்.
எனவே, துறை சார்ந்த அதிகாரிகள் மகளிர் சுகாதார வளாகத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.