/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செய்யூர் பஜார் வீதியை விரிவாக்கம் செய்ய வலியுறுத்தல்
/
செய்யூர் பஜார் வீதியை விரிவாக்கம் செய்ய வலியுறுத்தல்
செய்யூர் பஜார் வீதியை விரிவாக்கம் செய்ய வலியுறுத்தல்
செய்யூர் பஜார் வீதியை விரிவாக்கம் செய்ய வலியுறுத்தல்
ADDED : டிச 31, 2025 06:02 AM

செய்யூர்: குறுகலாக உள்ள செய்யூர் பஜார் வீதியை விரிவாக்கம் செய்ய வேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்யூர் ஊராட்சியில், 20,000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். ஊராட்சியின் மையப்பகுதியில், பஜார் பகுதி உள்ளது.
இங்கு அரசு மற்றும் தனியார் பள்ளிகள், காவல் நிலையம், நுாலகம், நுகர்பொருள் வாணிப கழக கிடங்கு, அஞ்சலகம், பேருந்து நிறுத்தம், அரசு மருத்துவமனை, மீன் மார்க்கெட், வங்கி போன்றவை செயல்படுகின்றன.
இந்நிலையில், செய்யூர் பஜார் வீதி குறுகலாக உள்ளதால் கார், வேன், பேருந்து, லாரி போன்ற வாகனங்கள் செல்லும் போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
முன்னால், செல்லும் வாகனங்களை முந்த முயற்சிக்கும் போது, விபத்துகள் ஏற்படுகின்றன.
குறிப்பாக, வியாழக் கிழமைதோறும் பஜார் வீதியில் வாரச்சந்தை நடப்பதால், வாகனங்கள் செல்ல வழியின்றி வாகன ஓட்டிகள் சிரமப்படு கின்றனர்.
எனவே, துறை சார்ந்த அதிகாரிகள் சாலையை அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றி, பஜார் வீதியை விரிவாக்கம் செய்ய வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

