/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தாலுகா அலுவலகத்தில் வி.ஏ.ஓ., உதவியாளர்கள் போராட்டம்
/
தாலுகா அலுவலகத்தில் வி.ஏ.ஓ., உதவியாளர்கள் போராட்டம்
தாலுகா அலுவலகத்தில் வி.ஏ.ஓ., உதவியாளர்கள் போராட்டம்
தாலுகா அலுவலகத்தில் வி.ஏ.ஓ., உதவியாளர்கள் போராட்டம்
ADDED : நவ 08, 2024 01:30 AM

கூடுவாஞ்சேரி:நந்திவரத்தில் உள்ள வண்டலூார் தாலுகா அலுவலகத்தில், தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியில் பணிபுரிந்து வரும் கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் உதவியாளர்கள், தாசில்தார் புஷ்பலதாவின் நடவடிக்கைக்கு எதிராக, உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து, போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் கூறியதாவது:
வண்டலுார் தாசில்தார் தன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, தனக்கு கீழ் பணிபுரியும் வருவாய் உதவியாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அதிகாரிகளுக்கு 'மெமோ' வழங்கியுள்ளார்.
இதை கண்டித்து, கிராம உதவியாளர்கள் சங்கத்தினர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் இணைந்து, உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். மாவட்ட நிர்வாகம் எங்கள் கோரிக்கைகளை ஏற்கும் வரை போராட்டம் தொடரும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.