/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வண்டலுார் தாசில்தாரை கண்டித்து வி.ஏ.ஓ.,க்கள் உள்ளிருப்பு போராட்டம்
/
வண்டலுார் தாசில்தாரை கண்டித்து வி.ஏ.ஓ.,க்கள் உள்ளிருப்பு போராட்டம்
வண்டலுார் தாசில்தாரை கண்டித்து வி.ஏ.ஓ.,க்கள் உள்ளிருப்பு போராட்டம்
வண்டலுார் தாசில்தாரை கண்டித்து வி.ஏ.ஓ.,க்கள் உள்ளிருப்பு போராட்டம்
ADDED : நவ 09, 2024 12:47 AM

கூடுவாஞ்சேரி:வண்டலுார் தாலுகாவிற்கு உட்பட்ட ஊராட்சிகளில் செயல்படும் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு பூட்டு போடப்பட்டு இருப்பதால், பொதுமக்கள் சான்றுகளை பெற முடியாமல் பாதிக்கப்பட்டனர்.
இது குறித்து, சமூக ஆர்வலர் கூறியதாவது:
வண்டலுார் தாசில்தாராக புஷ்பலதா இருந்து வருகிறார். அவர், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அவர் ஆய்வின் போது பணியில் இல்லாத அலுவலர்களிடம், அது தொடர்பாக விளக்கம் கேட்டுள்ளார். சரியான விளக்கம் தெரிவிக்காத கிராம நிர்வாக அலுவலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்காக, மெமோ வழங்கியுள்ளார்.
இதனை கண்டித்து, நந்திவரத்தில் உள்ள வண்டலுார் தாலுகா அலுவலகத்தில், கிராம நிர்வாக அலுவலர் சங்கம் மற்றும் கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் சங்கத்தினர் 100க்கும் மேற்பட்டோர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அவர்கள், தங்கள் பணிக்கு விடுமுறை எடுத்துக் கொண்டு, நேற்று மற்றும் நேற்று முன்தினம் ஆகிய இரு நாட்களும் அலுவலகத்தை பூட்டிவிட்டு, போராட்டத்தில் பங்கேற்று வருகின்றனர்.
இதனால், சுற்றுவட்டார பகுதியில் உள்ள பொதுமக்கள், பட்டா பெயர் மாற்றம், வருமான சான்று, முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு சான்று போன்றவற்றை பெற முடியாமல் பரிதவித்து வருகின்றனர்.
கிராம நிர்வாக அதிகாரிகள் மற்றும் உதவியாளர்களை மாவட்ட நிர்வாகம் அணுகி, பணிக்கு திரும்ப உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.