/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பூரியம்பாக்கத்தில் கான்கிரீட் சாலை அமைக்க கிராம மக்கள் கோரிக்கை
/
பூரியம்பாக்கத்தில் கான்கிரீட் சாலை அமைக்க கிராம மக்கள் கோரிக்கை
பூரியம்பாக்கத்தில் கான்கிரீட் சாலை அமைக்க கிராம மக்கள் கோரிக்கை
பூரியம்பாக்கத்தில் கான்கிரீட் சாலை அமைக்க கிராம மக்கள் கோரிக்கை
ADDED : டிச 28, 2025 06:07 AM

சித்தாமூர்,:பூரியம்பாக்கம் கிராமத்தில் கான்கிரீட் சாலை அமைக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சித்தாமூர் அருகே பூரியம்பாக்கம் கிராமத்தில், 300க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். கிராமத்தில் உள்ள மூன்றாவது தெருவில், பல ஆண்டுகளுக்கு முன் கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டு, மக்கள் பயன்படுத்தி வந்தனர்.
அதன் பின் பராமரிப்பின்றி சாலை சேதமடைந்து உள்ளதால் இருசக்கர வாகனம், கார் போன்ற வாகனங்களில் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர்.
தற்போது, கான்கிரீட் சாலை இருந்த தடமே தெரியாமல் உள்ளது.
மேலும், சாலையில் நடந்து செல்லும் முதியவர்கள் மற்றும் குழந்தைகள் சிரமப்படுகின்றனர். எனவே, ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, புதிதாக கான்கிரீட் சாலை அமைக்க வேண்டுமென, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.