/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
உடைந்துள்ள பள்ளி சுற்றுச்சுவர் சீரமைக்க கிராமத்தினர் கோரிக்கை
/
உடைந்துள்ள பள்ளி சுற்றுச்சுவர் சீரமைக்க கிராமத்தினர் கோரிக்கை
உடைந்துள்ள பள்ளி சுற்றுச்சுவர் சீரமைக்க கிராமத்தினர் கோரிக்கை
உடைந்துள்ள பள்ளி சுற்றுச்சுவர் சீரமைக்க கிராமத்தினர் கோரிக்கை
ADDED : செப் 14, 2025 02:15 AM

சிங்கபெருமாள் கோவில்:சிங்கபெருமாள் கோவில் அருகே, அஞ்சூர் கிராமத்தில், உடைந்துள்ள அரசு பள்ளி சுற்றுச்சுவரை சீரமைக்க வேண்டுமென, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிங்கபெருமாள் கோவில் அடுத்த அஞ்சூர் கிராமத்தில், அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில், 500க்கும் மேற்பட்ட மாணவ -- மாணவியர் படித்து வருகின்றனர்.
பள்ளி வளாகத்தைச் சுற்றி, மாணவ - மாணவியர் பாதுகாப்பிற்காக, கடந்த 15 ஆண்டுகளுக்கு முன், ஐந்தடி உயரத்தில் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டது.
தற்போது, சுற்றுச் சுவரின் ஒரு பகுதி உடைந்து உள்ளதால், விடுமுறை நாட்களில் பள்ளி வளாகத்தில் வெளி ஆட்களின் நடமாட்டம் உள்ளது.
மர்ம நபர்கள் சிலர், இங்குள்ள மரத்தடியில் அமர்ந்து மது அருந்துவது, சீட்டாட்டம் விளையாடுவது என, சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
எனவே, உடைந்து உள்ள சுற்றுச்சுவரை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.