/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பங்கஜபுரத்தில் சாலை வசதியின்றி பல ஆண்டாக கிராமத்தினர் அவதி
/
பங்கஜபுரத்தில் சாலை வசதியின்றி பல ஆண்டாக கிராமத்தினர் அவதி
பங்கஜபுரத்தில் சாலை வசதியின்றி பல ஆண்டாக கிராமத்தினர் அவதி
பங்கஜபுரத்தில் சாலை வசதியின்றி பல ஆண்டாக கிராமத்தினர் அவதி
ADDED : செப் 14, 2025 02:26 AM

ஊரப்பாக்கம்:பங்கஜபுரத்தில் சாலை வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஊரப்பாக்கம் அடுத்த ஆதனுார் ஊராட்சி, பங்கஜபுரத்தில், 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இங்கு, சாலை வசதி இதுவரை ஏற்படுத்தி தரப்படவில்லை. சிறு மழை பெய்தாலும், பள்ளி செல்லும் மாணவர்கள் முதல், அனைவரும் சிரமப்பட்டு வருகின்றனர்.
அவசர காலத்தில், ஆம்புலன்ஸ் வாகனங்கள் வந்து செல்வதற்கும் சிரமமாக உள்ளது.
இது குறித்து கடந்த நான்கு ஆண்டுகளாக ஊராட்சி நிர்வாகம், முதல்வர் தனிப் பிரிவு என, பல தரப்பு நிர்வாக அதிகாரிகளுக்கு, இப்பகுதி மக்கள் புகார் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் இல்லை.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, பங்கஜபுரத்தில் சாலை வசதி ஏற்படுத்தித் தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென, இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.