/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அனுமந்தபுரத்தில் துார்ந்த வடிகால் சாலையில் தண்ணீர் தேங்கி அவதி
/
அனுமந்தபுரத்தில் துார்ந்த வடிகால் சாலையில் தண்ணீர் தேங்கி அவதி
அனுமந்தபுரத்தில் துார்ந்த வடிகால் சாலையில் தண்ணீர் தேங்கி அவதி
அனுமந்தபுரத்தில் துார்ந்த வடிகால் சாலையில் தண்ணீர் தேங்கி அவதி
ADDED : டிச 17, 2024 11:39 PM

மறைமலைநகர்:சிங்கபெருமாள் கோவில் அடுத்த அனுமந்தபுரம் ஊராட்சியில், 350க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு, சிங்கபெருமாள் கோவில் -- சென்னேரி செல்லும் சாலையில், கெங்கையம்மன் கோவில் அருகில் குளம் உள்ளது.
கனமழை காரணமாக, தற்போது குளம் முழுதும் நிரப்பி, உபரி நீர் வெளியேறி வருகிறது. உபரி நீர் வெளியேற கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட வடிகால்வாய் துார்ந்து போனதால், தண்ணீர் செல்ல முடியாத நிலை உள்ளது.
இதன் காரணமாக, குளத்தில் இருந்து வெளியேறும் உபரிநீர், சாலையில் உள்ள வேகத்தடை அருகில் தேங்குகிறது.
இந்த சாலையில் வாகனங்கள் செல்லும் போது, பாதசாரிகள் மற்றும் பள்ளி குழந்தைகள் மீது, தண்ணீர் பட்டு சிரமப்படுகின்றனர். எனவே, இந்த பகுதியில் உள்ள மழைநீர் வடிகால்வாயை துார் வார, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.