/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
புழுதிவாக்கம் கூட்டு சாலை சந்திப்பில் குடிநீர் தொட்டி வசதி ஏற்படுத்தப்படுமா?

ADDED : ஏப் 01, 2025 11:17 PM

மதுராந்தகம்:மதுராந்தகம் ஒன்றியம், சூரை ஊராட்சிக்கு உட்பட்ட புழுதிவாக்கம் கூட்டுச்சாலை சந்திப்பில், சிறிய குடிநீர் தொட்டி வசதி ஏற்படுத்த வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.
மதுராந்தகம் -- உத்திரமேரூர் மாநில நெடுஞ்சாலையில், புழுதிவாக்கம் கூட்டுச்சாலை உள்ளது.
அந்த கூட்டுச்சாலை சந்திப்பில் இருந்து வேடந்தாங்கல், வெள்ளப்புத்துார் மற்றும் வையாவூர் போன்ற பகுதிகளுக்குச் செல்லும் சாலை உள்ளது.
இந்த கூட்டுச்சாலை சந்திப்பில், கடந்த 7 ஆண்டுகளுக்கு முன், 6 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஆழ்துளைக் கிணறு, மின்மோட்டார் வசதியுடன் குடிநீர் மினி டேங்க் எனப்படும் சிறிய தண்ணீர் தொட்டி வைக்கப்பட்டது.
தற்போது, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இந்த குடிநீர் தொட்டி, பயன்பாடின்றி உள்ளது.
எனவே, மக்கள் நடமாட்டம் மற்றும் கடைகள் உள்ள பகுதி என்பதால், ஊராட்சி, ஒன்றிய அதிகாரிகள் இந்த குடிநீர் தொட்டியை சீரமைத்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.