/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கை - பெருங்களத்துார் வரை பஸ் பயணியர் நிழற்குடை வருமா?
/
செங்கை - பெருங்களத்துார் வரை பஸ் பயணியர் நிழற்குடை வருமா?
செங்கை - பெருங்களத்துார் வரை பஸ் பயணியர் நிழற்குடை வருமா?
செங்கை - பெருங்களத்துார் வரை பஸ் பயணியர் நிழற்குடை வருமா?
ADDED : ஜன 19, 2025 08:08 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு - பெருங்களத்துார் வரை, சாலையின் இருபுறமும் பயணியர் நிழற்குடை அமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செங்கல்பட்டு - பெருங்களத்துார் வரை, தேசிய நெடுஞ்சாலை ஆறு வழிச்சாலையாக இருந்தது.
அப்போது செங்கல்பட்டு, பரனுார், சிங்கபெருமாள் கோவில், கீழக்கரணை, மறைமலைநகர், காட்டாங்கொளத்துார், பொத்தேரி, கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், வண்டலுார், பெருங்களத்துார் வரை, சாலையின் இருபுறம் தேசிய நெடுஞ்சாலை ஆணையம், பயணியர் நிழற்குடை அமைத்தது.
அதன் பின், கடந்த சில ஆண்டுகளுக்கு முன், இச்சாலையில் வாகன போக்குவரத்து அதிகரித்தது. இதனால், ஆறு வழிச்சாலையை, எட்டு வழிச்சாலையாக மாற்ற, ஆணையம் முடிவு செய்தது.
இச்சாலையை விரிவாக்கம் செய்த போது, சாலையின் இருபுறமும் இருந்த பயணியர் நிழற்குடையை அப்புறப்படுத்தி, எட்டு வழிச்சாலையாக அமைத்தது. ஆனால், மீண்டும் பயணியர் நிழற்குடைகள் அமைக்கப்படவில்லை.
இதனால், பயணியர் மழை, வெயில் காலங்களில், கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். பயணியர் நிழற்குடை அமைக்க, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு, சமூக ஆர்வலர்கள் மனு அளித்தனர்.
இந்த மனுக்கள் மீது நடவடிக்கையின்றி கிடப்பில் போடப்பட்டது.
இச்சாலையில், பயணியர் நிழற்குடை அமைக்க, கலெக்டரிடம் மனு அளித்தனர். அதன் பின், சாலையின் இருபுறமும், நிழற்குடை அமைக்க, உள்ளாட்சி அமைப்புகளுக்கு, அப்போதைய கலெக்டர் ராகுல்நாத் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவிற்குப் பிறகும், பயணியர் நிழற்குடை அமைக்கப்படவில்லை. எனவே, பொதுமக்கள் நலன் கருதி, செங்கல்பட்டு - பெருங்களத்துார் வரை, சாலையின் இருபுறமும் பயணியர் நிழற்குடை அமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.