/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மயானத்தில் எரியூட்டும் மேடை சீரமைக்கப்படுமா?
/
மயானத்தில் எரியூட்டும் மேடை சீரமைக்கப்படுமா?
ADDED : நவ 25, 2024 01:52 AM

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் பேரூராட்சி, 15வது வார்டில் மேட்டு கிராமம் உள்ளது. இப்பகுதியில் 500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு, மேட்டு கிராமம் செல்லும் வழியில் மயானம் உள்ளது.
இங்கு, இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யவும், எரியூட்டவும் போதுமான இடவசதி இல்லை. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன், ஓடுகளால் வேயப்பட்ட எரியூட்டும் கொட்டகை அமைக்கப்பட்டது.
கடந்த சில ஆண்டுகளாக உரிய பராமரிப்பின்றி, கொட்டகை உடைந்துள்ளது. இதனால், கொட்டகை எப்போது வேணாலும் விழும் அபாய நிலை உள்ளது.
இதுகுறித்து அப்பகுதியினர் கூறியதாவது:
இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய போதுமான இடவசதி இல்லை. மழைக்காலங்களில் எரியூட்டும் கொட்டகை உள்ள பகுதியில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.
இதனால், சிமென்ட் கான்கிரீட்டால் எரியூட்டும் மேடை அமைத்து தரக்கோரி, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு மனு அளித்தும், தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மேலும், சுற்றுச்சுவர் இன்றி, மயானம் திறந்தவெளியில் உள்ளதால், மண்ணில் புதைக்கப்பட்ட உடல்களை நாய்கள் தோண்டி எடுக்கும் அவலநிலை உள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.