/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வேளச்சேரி - அச்சரவாக்கம் தடம் மானாமதி வரை நீட்டிக்கப்படுமா?
/
வேளச்சேரி - அச்சரவாக்கம் தடம் மானாமதி வரை நீட்டிக்கப்படுமா?
வேளச்சேரி - அச்சரவாக்கம் தடம் மானாமதி வரை நீட்டிக்கப்படுமா?
வேளச்சேரி - அச்சரவாக்கம் தடம் மானாமதி வரை நீட்டிக்கப்படுமா?
ADDED : மார் 06, 2024 08:52 PM
திருப்போரூர்:சென்னை வேளச்சேரி- -- அச்சரவாக்கம் தடம் எண்: 523 ஏ பேருந்து, பள்ளிக்கரணை, மேடவாக்கம், பொன்மார், மாம்பாக்கம், காயார், நெல்லிக்குப்பம், கொட்டமேடு, செம்பாக்கம் வழியாக, அச்சரவாக்கம் வரை இயக்கப்படுகிறது.
அச்சரவாக்கத்திலிருந்து 4 கி.மீ., தொலைவில் மானாமதி கிராமம் உள்ளது. மானாமதி கிராமத்தை சுற்றி உள்ள ஆனந்தபுரம், அருங்குன்றம், திருநிலை, பெரியவிப்பேடு உள்ளிட்ட கிராமங்களிலிருந்து கல்வி, தொழில் நிறுவனங்களுக்கு மேற்கண்ட பேருந்து வாயிலாக, மக்கள் சென்று வருகின்றனர்.
எனவே, வேளச்சேரியிலிருந்து அச்சரவாக்கம் வரை இயக்கப்படும் பேருந்தை, 4 கி.மீ., தொலைவில் உள்ள மானாமதி வரை நீட்டிக்க, மாநகர போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுக்க வேணடும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.