/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வில்லியம்பாக்கம் கோவில் குளம் கனமழைக்கும் நிரம்பாத சோகம்
/
வில்லியம்பாக்கம் கோவில் குளம் கனமழைக்கும் நிரம்பாத சோகம்
வில்லியம்பாக்கம் கோவில் குளம் கனமழைக்கும் நிரம்பாத சோகம்
வில்லியம்பாக்கம் கோவில் குளம் கனமழைக்கும் நிரம்பாத சோகம்
ADDED : டிச 05, 2024 11:10 PM

மறைமலைநகர், காட்டாங்கொளத்துார் ஒன்றியம், வில்லியம்பாக்கம் ஊராட்சியில், 600க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. கிராம மக்கள் விவசாயம் மற்றும் அதைச் சார்ந்த பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இங்கு கிராமத்தின் மையப்பகுதியில், பழமையான சொர்ணாம்பிகை சமேத தொக்கீஸ்வர் கோவில் உள்ளது. இக்கோவில் ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
கோவிலின் முன்பக்கத்தில், திருக்குளம் உள்ளது. குளத்திற்கு செல்லும் நீர்வரத்து கால்வாய்கள் துார் வாரப்படாததாலும், கழிவுநீர் கலந்துள்ளதாலும், தற்போது குளத்தில் போதிய அளவு தண்ணீர் இல்லை.
'பெஞ்சல்' புயல் காரணமாக கொட்டித் தீர்த்த கனமழையால், இதே பகுதியில் உள்ள வில்லியம்பாக்கம் -- சாஸ்திரம்பாக்கம் சாலையில், நீஞ்சல் மடுவில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி, பாலாற்றில் கலந்தது.
ஆனால், இந்த கோவில் குளம் நிரம்பாததால், கோடை காலத்தில் நிலத்தடி நீர் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த குளம் மற்றும் குளத்திற்கு வரும் நீர்வழிப் பாதைகளை முறையாக துார்வார வேண்டும் என, கிராமவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.