/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாடு குறுக்கே பாய்ந்து வேன் கவிழந்து பெண் பலி
/
மாடு குறுக்கே பாய்ந்து வேன் கவிழந்து பெண் பலி
ADDED : ஜூலை 19, 2025 10:58 PM
திருப்போரூர்:சிறுசேரி தனியார் நிறுவனத்தின் ஹவுஸ் கீப்பிங் பணியாளர்கள் பணி முடிந்து ஆண், பெண் என, 11க்கும் மேற்பட்டோர் நேற்று முன்தினம் மாலை வேனில் சென்றனர்.
புதிய பைபாஸ் சாலையில் படூரிலிருந்து கேளம்பாக்கம் நோக்கி சென்றபோது, கேளம்பாக்கம் மாதா கோவில் தெரு, புதிய பைபாஸ் சாலை சந்திப்பில் பசுமாடு ஒன்று குறுக்கே சென்றது.
அதன் மீது மோதாமல் இருக்க ஓட்டுநர் திடீரேன பிரேக் பிடித்தபோது வேன் மாட்டின் மீது மோதியது. அதேநேரத்தில் வேன் கட்டுப்பாட்டை இழுந்து நிலை தடுமாறி தலைகீழாக கவிழ்ந்தது.
இந்த விபத்தில் மானாம்பதி பகுதியைச் சேர்ந்த பிரேமா, 40 என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 3 பேர் படுகாயங்களுடன் கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.