/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
துணி கடையில் பெண்ணிடம் மொபைல்போன் திருட்டு
/
துணி கடையில் பெண்ணிடம் மொபைல்போன் திருட்டு
ADDED : பிப் 27, 2025 09:02 PM
மறைமலைநகர்:சிங்கபெருமாள்கோவில் அடுத்த ஆப்பூரைச் சேர்ந்தவர் ருக்மணி, 28. நேற்று முன்தினம் சிங்கபெருமாள்கோவில் - அனுமந்தபுரம் சாலையில் உள்ள துணிக்கடைக்குச் சென்றார்.
கடையில் துணி எடுத்துக் கொண்டு இருந்த போது, அவரது 'ஒப்போ' மொபைல் போனை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
மொபைல் போன் திருடப்பட்டதை சிறிது நேரம் கழித்து அறிந்த ருக்மணி, இதுகுறித்து மறைமலைநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
கடையில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை, போலீசார் ஆய்வு செய்தனர்.
அதில், 38 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், மொபைல்போனை திருடிச் செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. அதை வைத்து, அந்த பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

