/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வேலைவாய்ப்பு முகாமில் 60 பேருக்கு பணி ஆணை
/
வேலைவாய்ப்பு முகாமில் 60 பேருக்கு பணி ஆணை
ADDED : நவ 17, 2024 09:50 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்ட நிர்வகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் இணைந்து, தனியார் வேலை வாய்ப்பு முகாமை, கலெக்டர் அலுவலகத்தில், இரு நாட்களுக்கு முன் நடத்தின.
இந்த முகாமில், 33 தனியார் நிறுவனங்கள், மூன்று திறன்பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் பங்கேற்று, 374 பேருக்கு நேர்முக தேர்வு நடத்தின. இதில், 33 ஆண்கள், 27 பெண்கள் என, மொத்தம் 60 பேர் தேர்வு செய்யப்பட்டு, பணி நியமன ஆணை பெற்றனர்.
முதற்கட்ட தேர்வில், 198 தேர்வு செய்துள்ளதாகவும், 12 பேர் திறன் பயிற்சிக்காக விரும்பம் தெரிவித்துள்ளதாகவும், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் தணிகைவேலு தெரிவித்தார்.