/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நடவு பணிகளில் விவசாயிகள் மும்முரம்
/
நடவு பணிகளில் விவசாயிகள் மும்முரம்
ADDED : மே 25, 2024 06:12 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அச்சிறுபாக்கம் : அச்சிறுபாக்கம் சுற்றுவட்டார பகுதியில், கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருவதால், நெல் நடவு பணிகளில் விவசாயிகள் மும்முரம் காட்டி வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில், அச்சிறுபாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒரத்தி, கீழ்அத்திவாக்கம், ராமாபுரம், களத்துார் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது.
கிணற்று பாசனம் வாயிலாக, சொர்ணாவாரி பட்டத்தில், 700 ஏக்கர் நிலப்பரப்பில், விவசாயிகள் நெல் நடவு செய்து வருகின்றனர். தற்போது, கோடை மழை பெய்து வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சியுடன் விவசாய பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.