/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கார் கவிழந்து விபத்து இளம் பெண் பலி
/
கார் கவிழந்து விபத்து இளம் பெண் பலி
ADDED : டிச 28, 2024 08:36 PM
மாமல்லபுரம்,:ஆந்திர மாநிலம், திருப்பதி அடுத்த, செட்டிப்பள்ளியைச் சேர்ந்த, சேகர் மனைவி அஞ்சலி, 41 மற்றும் உறவினர்கள், யுனோவா காரில், நேற்று காலை, மாமல்லபுரத்திற்கு சென்று கொண்டிருந்தனர். அதே பகுதியைச் சேர்ந்த ஹரிபாபு, 42, காரை ஓட்டினார்.
மாமல்லபுரம் அடுத்த, காரணை பகுதியில், கடந்தபோது, சாலையின் குறுக்கில் கடந்த பாம்பின் மீது, கார் ஏறாமல் தவிர்க்க, சாலையோரம் ஒதுங்கியபோது, பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் அஞ்சலி, சந்திரிகா, 22, மற்றும் ஒன்பது பேர் காயமடைந்தனர்.
மாமல்லபுரம் போலீசார், அவர்களை மீட்டு, மாமல்லபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் சந்கிரிகா மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்தார்.
மாமல்லபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.