/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கோவில் உண்டியல் உடைத்து பணம் திருடிய வாலிபர் கைது
/
கோவில் உண்டியல் உடைத்து பணம் திருடிய வாலிபர் கைது
ADDED : ஜன 20, 2025 01:47 AM

மதுரவாயல்,:வானகரம் சிவபூதமேடு பகுதியில், ஸ்ரீசிவசக்தி கருமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு, கடந்த டிச., மாதம் 12ம் தேதி புகுந்த மர்ம நபர், கோவில் உண்டியலை உடைத்து, 3,000 ரூபாய் திருடி சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து, கோவில் நிர்வாகி குமார், 67, மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதுகுறித்து விசாரித்த போலீசார், கோவில் உண்டியலை உடைத்த மதுரவாயல் சீமாத்தம்மன் நகர், 7வது தெருவை சேர்ந்த விஜயகுமார், 20, என்பவரை, நேற்று முன்தினம் கைது செய்தனர்.
அவரிடம் இருந்து, 2,000 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில், விஜயகுமார் மீது மதுரவாயல், கோயம்பேடு, வளசரவாக்கம் உள்ளிட்ட காவல் நிலையங்களில், 6 குற்ற வழக்குகள் உள்ளது தெரியவந்தது.