/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
3 கிலோ கஞ்சா வைத்திருந்த வாலிபர்கள் கைது
/
3 கிலோ கஞ்சா வைத்திருந்த வாலிபர்கள் கைது
ADDED : பிப் 10, 2025 11:57 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, கொருக்குப்பேட்டை போலீசார், நேற்று காலை, கண்ணன் சாலையில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து விசாரித்ததில், அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.
பின், அவர்களை சோதனை செய்து பார்த்தபோது, கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்தது தெரியவந்தது.
அவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்ததில், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த திபுன் திகால், 19, பிபேக் நாயக், 19, என்பது தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.