ADDED : நவ 08, 2024 09:15 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடுவாஞ்சேரி:காட்டாங்கொளத்துார் பகுதியில், வட மாநிலத்தைச் சேர்ந்த குலாம் சர்வர், 24, அவரது மனைவி ஷஜ்ரன் குட்டன், 20, தம்பதியர் வசித்து வருகின்றனர்.
இவர்களது வீட்டின் அருகில் வசித்து வரும் பச்சமுத்து மகன் நடராஜ், 19, என்பவர், தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், நேற்று வீட்டில் தனியாக இருந்த ஷஜ்ரன் குட்டனை, பின்புறமாக சென்று கட்டிப் பிடித்து, பாலியல் சீண்டலில் நடராஜ் ஈடுபட்டுள்ளார்.
இது குறித்து, ஷஜ்ரன் குட்டன் அளித்த புகாரின்படி, கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மாலினி வழக்கு பதிந்து, தலைமறைவாக இருந்த நடராஜை கைது செய்து, செங்கல்பட்டு நீதிமன்ற சிறையில் அடைத்தனர்.