/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பெண்ணிடம் செயின் பறிக்க முயன்ற வாலிபர் கைது
/
பெண்ணிடம் செயின் பறிக்க முயன்ற வாலிபர் கைது
ADDED : அக் 15, 2025 10:17 PM
திருப்போரூர்: பெண்ணிடம் செயின் பறிக்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருப்போரூர் அடுத்த கேளம்பாக்கம் ஊராட்சி, சாத்தங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ஷர்மிளா. 30, இவர், அதே பகுதி தனியார் பல் மருத்துவ மனையில் மருத்துவ உதவியாளராக பணிபுரிகிறார். நேற்று மதியம் 2:00 மணிக்கு சாப்பிட வீட்டிற்கு நடந்து சென்றார்.
அப்போது, வாலிபர் ஒருவர் ஷர்மிளாவை பின் தொடர்ந்து வந்து, அவர் கழுத்தில் இருந்த 3 சவரன் செயினை பறிக்க முயன்றார்.
அப்போது, அவர் கூச்சலிட்டதும் அங்கிருந்தவர்கள் ஓடிவந்து வாலிபரை பிடித்து கேளம்பாக்கம் போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில், திருப்போரூர் பகுதியை சேர்ந்த உதயகுமார், 36 என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.